ஞாபகமூட்டலு​க்கு தடையாக இருக்கும் றிங்கிங் டோன்கள்


ஞாபகமூட்டலு​க்கு தடையாக இருக்கும் றிங்கிங் டோன்கள்

நாம் செல்போன்களை பயன்படுத்தும் போது வரும் அழைப்புக்களை அறிந்து கொள்வதற்காக றிங்கிங் டோன்களை பயன்படுத்துவோம்.
இந்த றிங்கிங் டோன்கள் மனிதனின் ஞாபகமூட்டல் அல்லது நினைவாற்றலை திசைதிருப்பக்கூடியன என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சென் லூசியசிலுள்ள வாசிங்ரன் பல்கலைக்கழத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 30 செக்கன்களுக்கு மேலாக தொடர்ந்து இசைக்கும் றிங்கிங் டோன்கள் மிகவும் சத்தமாக காணப்படுவதனால் அந்த சூழலிலுள்ள அனைவரினதும் கவனங்கள் திசை திருப்பப்படுவதனாலேயே அவர்களின் நினைவாற்றலை பாதிப்பதாகவும், இதன்போது அண்ணளவாக 25 வீதமான நினைவாற்றல் இழக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த குறித்த பல்கலைக்கழக மாணவரான ஜில் செல்ரன் கூறுகையில், றிங்கிங் டோன்கள் மட்டுமல்ல பொது இடங்களில் ஏற்படுத்தப்படும் ஏனைய சத்தங்களினாலும் இவ்வாறான பாதிப்பு ஏற்படுவதாக குறித்த ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே செல்போன்களை Silent நிலையில் பாவிப்பது ஆரோக்கியமானது என மேற்படி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.