இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்


இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம்

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இலக்கு என்பது மிக முக்கியது. அந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெறலாம்.
பகிர்ந்து கொள்வதன் மூலம் இலக்குகளை அடைவது சுலபமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் “43 திங்ஸ்” என்ற இணையத்தளம் உங்களை அழைக்கிறது.
இலக்குகளை அடைய உதவும் இணையத்தளங்களில் ஒன்றான இந்த தளம் இலக்குகளை உலகோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. அவற்றை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் பெறலாம், புதிய இலக்குகளை உருவாக்கி கொள்ளலாம்.
இலக்குகள் எளிதானதோ, கடினமானதோ, சாதரணமானதோ, உயர்வானதோ எதுவாக இருந்தாலும் அந்த இலக்குகளை அடைவதற்கான வழி எளிதானது என்பதை இந்த தளம் காட்டுகிறது. அதற்கேற்ப இந்த தளத்தின் வடிவமைப்பும் சரி, அதனை பயன்படுத்துவதும் சரி மிகவும் எளிதானது.
மனதில் உள்ள இலக்குகளை அடைவதற்கான முதல் படி அவற்றை மறக்காமல் இருக்க குறித்து வைப்பது தான். அடிப்படையில் இந்த தளம் அதனை தான் செய்கிறது.
எந்த இலக்கை அடைய விருப்பமோ அதனை இங்கு குறித்து வைக்கலாம். முகப்பு பக்கத்திலேயே வரிசையாக உள்ள கட்டங்களில் இலக்குகளை குறிப்பிட வேண்டியது தான்.
இலக்குகளை குறித்து வைத்த பின் அவற்றை அச்சிட்டு வைத்து கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் மூலம் நமக்கு நாமே அனுப்பி நினைவூட்டி கொள்ளலாம். பேஸ்புக் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
அப்படியே உலகம் முழுவதும் உள்ள இலக்கு அடைய விரும்பும் நபர்களோடு பகிர்ந்து கொள்லலாம். இப்படி இலக்குகளை பகிர்ந்து கொள்வது தான் இந்த தளத்தின் சிறப்பம்சமே.
இந்த தளத்தில் இலக்குகளை சமர்பித்தது உறுப்பினரானதுமே உங்கள் இலக்குகளுக்கான பக்கம் ஒன்று உருவாக்கி தரப்படுகிறது. உங்கள் இலக்குகளை நிர்வகிப்பதற்கான பக்கம் இது.
முதல் வேலையாக உங்கள் இலக்கை பற்றி விரிவாக குறிப்பிட்டு கொள்ளலாம். அதன் பிறகு இலக்கை நோக்கிய பயணத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை இதே போலவே வெளியிட்டு கொள்ளலாம். இலக்கை அடைந்துவிட்டால் வெற்றிகரமாக முடித்துவிட்டேன் என்று குறித்து வைத்து கொள்ளலாம்.
இலக்கை நோக்கி பயணிப்பதோடு அந்த பாதியில் தோழர்களையும் தேடிக்கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.