லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய


லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இம்முப்பரிமாண மென்பொருட்களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட Bryce 7 Pro என்ற மென்பொருள் மிகச்சிறந்த முறையிலும் இலகுவாகவும் முப்பரிமாண உருவங்களை வடிவமைக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் பெறுமதி 249.95 அமெரிக்க டொலர்களாகும்.
இருந்தும் எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதிவரை இம்மென்பொருளையும் அதன் Licence Key ஐயும் DAZ 3D என்ற இணையத்தினூடு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் இலவசமகா குறித்த மென்பொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
1. DAZ 3D (https://www.daz3d.com/i/newaccount/0) இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கவும்.
2. இங்கு அழுத்துவதன் மூலம்(http://www.daz3d.com/i/3d-models/-/bryce-7-pro?item=11034) மென்பொருளை இலவசமாக வழங்கும் இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
3. அப்பக்கத்தில் காணப்படும் Add To cart என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
4. பின் checkout என்பதை அழுத்தி தரப்படும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும், Licence Key ஐயும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற முடியும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.