மெஸ்சியின் அதிரடியால் அர்ஜென்டினா வெற்றி |
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினா- சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் 19வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். இதற்கு சுவிட்சர்லாந்தின் ஷாக்ரி, 49வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். பின் 87வது நிமிடத்தில் மெஸ்சி இரண்டாவது கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் இறுதியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி, ஜேர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
மெஸ்சியின் அதிரடியால் அர்ஜென்டினா வெற்றி
0
10:05 AM
Tags