ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்கிறார் ராணி எலிசபெத் |
இங்கிலாந்தின் அரசியாக பதவியேற்று இந்த ஆண்டோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது வைர விழாவை கொண்டாடினார். இதனை கொண்டாடும் வகையில் லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் ஆகிய இரண்டு போட்டிகளையும் தொடங்கி வைக்கவுள்ளார். ஒலிம்பிக் போட்டி யூலை மாதம் 27ம் திகதி அன்று பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் தொடங்குகிறது. இதே வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி அன்று பாராலிம்பிக்ஸ் போட்டியை திறந்து வைக்கிறார். 1976ம் ஆண்டில் மொன்றியலில் ஒலிம்பிக் போட்டி ராணியின் சார்பாக அவரது கணவர் எடின்பர்க்கால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்கிறார் ராணி எலிசபெத்
0
10:09 AM
Tags