சொனி நிறுவனம் அறிமுகப்படு​த்தியுள்ள புதிய voice recorder




குரல்களை பதிவு செய்வதற்கென பல வகையான voice recorderகள் பாவனையில் உள்ள போதும் சொனி நிறுவனமாது மெலிதான தோற்றமும் அதிகூடிய வினைத்திறனும் கொண்ட voice recorderகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ICD-TX50 என்ற வியாபார பெயரைக் கொண்டுள்ள இந்த புதிய voice recorderகள் வெறும் 50 கிராம் நிறையை மட்டுமே உடையதாகவும், 6.4 மில்லி மீட்டர்கள் தடிப்புடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 4GB நினைவகத்தை கொண்டுள்ளது.
மேலும் 16 bit, 44.1 kHz அதிர்வெண்ணிலும் இறுவட்டிற்குரிய தரத்தில் தொடர்ச்சியாக 6 மணித்தியாலங்கள் பதிவு செய்ய முடியும்.
இது தவிர சாதாரணமாக  MP3 தரத்தில் 44 மணித்தியாலங்கள் தொடக்கம் 178 மணித்தியாலங்கள் வரை பதிவு செய்ய முடியும். 149.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள இக்கருவியில் பயன்படுத்தப்படும் மின்கலமானது மிகச்சிறந்த பாவனையை உடையதாவும் 3 நிமிடங்கள் சார்ச் செய்யும் போது ஒரு மணித்தியாலங்கள்வரை பதிவு செய்யும் அளவிற்கு நீடித்து உழைக்கவல்லன.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.