உலாவிகளின் குறை, நிறைகள்



இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல உலாவிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை.
சில வேகமாக இயங்கும், பல உலாவிகள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.
1. கூகுள் குரோம் பதிப்பு 17: மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள உலாவி. இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவை முடங்கிப் போனால் உலாவியின் இயக்கத்திறனை நிறுத்தாமல் அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை கொண்டுள்ளது.
இதன் பல அடுக்கு பாதுகாப்பு(Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை.
இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப்பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட்கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது.
பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில் இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.
வேறு மொழிகளில் உள்ள இணையத்தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும் அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.
2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10: பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான உலாவி. எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை.
ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள் உலாவியின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலகீனமே. மார்ச் 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர் இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன.
மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.
3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9: பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற உலாவிகள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.
ஒவ்வொரு தனி நபருக்குமாக குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.