விரைவில் Nokia Lumia 719 கைபேசிகள் அறிமுகம்




முதன் முதலாக ஆசியாவிலும், அமெரிக்காவிலும் Nokia Lumia 719 என்ற கைபேசி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இவை தற்போது சந்தையில் காணப்படும் Nokia Lumia 710 என்ற கைப்பேசியை விடவும் மெலிதானதாக வடிவமைக்கப்படுகின்றது.
மேலும் இதன் திரையானது 3.7 அங்குலமுடைய AMOLED வகைக்குரியதாக காணப்படுவதுடன் 5 மெகா பிக்சல் கமெராவை கொண்டுள்ளது.
இதன் மூலம் அதி உயர் பிரிதிறன் கொண்ட வீடியோ பதிவையும் மேற்கொள்ள முடியும். இக்கைபேசி தொடர்பாக மார்ச் 28ம் திகதியளவில் சீனாவில் வைத்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.