1AVCenter: கணனியில் அவசியம் காணப்பட வேண்​டிய மென்பொருள்


கணனிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பல்வேறு வேலைகளுக்கென தனித்தனியாக மென்பொருட்களை நிறுவி வைத்திருப்போம்.
இதே நேரம் பல வசதிகளைக் கொண்ட ஒரு மென்பொருளை நிறுவினால் கணனியின் வன்றட்டில் இடம் மீதப்படுத்தப்படுவதுடன், கணனியின் தொழிற்பாடும் வினைத்திறனானதாகக் காணப்படும்.
இதன் அடிப்படையில் 1AVCenter என்ற மென்பொருளானது Capture, record, broadcast போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் மூலம் உங்களது தனிப்பட்ட இணையத்தளத்திற்கு பாதுகாப்பாக கோப்புக்களை பரிமாறுதல், வேறொரு நபருக்கு அனுப்புதல், தரவேற்றம் போன்றவற்றையும், எந்தவொரு முதலிலிருந்தும்(source) ஒலிப்பதிவு செய்யக்கூடிய வசதியையும் கொண்டுள்ளதோடு இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.