தொடர்ச்சியாக வெடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன்கள்!

தென்கொரியாவில் நபரொருவரின் செம்சுங் கெலக்ஸி நோட் ஸ்மார்ட் போன் வெடித்ததில் அவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் தனது காற்சட்டையின் வலது பக்க பொக்கெட்டுக்குள் ஸ்மார்ட் போனை வைத்திருந்துள்ளார். இதன்போது அச் ஸ்மார்ட் போன் வெடித்ததனால் அவரது வலது தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் அவரது காற்சட்டையும் எரிந்துள்ளது. எனினும் குறித்த நபர் இவ்விடயம் தொடர்பில் செம்சுங் நிறுவனத்திற்கு இதுவரை அறிவிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மேலதிக பெட்டரி ஒன்றையும் தனது ஸ்மார்ட் போனுடன் காற்சட்டைப் பொக்கெட்டில் வைத்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக லித்தியம் ஐயன் பெட்டரிகள் வெளிப்புற அமுக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றம் போன்ற காரணங்களால் தீப்பற்றி எரியக்கூடியதெனவும் எனவே இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் செம்சுங் நிறுவன பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.