iPhone கமெராவை வினைத்திறன் வாய்ந்த DSLR கமெராவாக மாற்றும் சாதனம்

அப்பிள் நிறுவனத்தினால் வடிவமைப்பு செய்யப்பட்டு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone கமெராக்கள் 8 மெகாபிகல்சகளை உடையதாகவே காணப்படுகின்றன.
ஆனால் இக் கமெராக்களை 20.2 மெகாபிக்சல்களை உடைய DSLR (Digital Single-Lens Reflex Camera) கமெராக்கள் போன்று அதி வினைத்திறன் உடையதாக மாற்றியமைப்பதற்குரிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை DxO நிறுவனம் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதன் ஊடாக 30fps வேகம் கொண்டதும், 1080 Pixel உடைய வீடியோக்களை, அல்லது 120fps வரையான வேகம் கொண்ட 720 Pixel உடைய வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.
சட்டைப் பையினுள் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு சிறியதாக காணப்படும் இதன் விலையானது 599 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.