உன்னோடு காதலி இருந்தால் நீயும் கா(த)லி உன்னை விட்டு விலகி சென்றால் நீ மட்டும் கா(த)லி............!!!
கண்டேன்
காலை நேரத்தில் கருங்குயில் கூவும் நேரத்தில் கண்ணே! நீ கண் விழிக்கும் அழகை கண்டேன்... கதிரவன் உதிக்கையில் கடும் பனி மறையும் நேரத்தில்-கண்ணே! உன் கலைந்த முடி அழகை கண்டேன்.. பூக்கள் விரியும் நேரத்தில் பட்டாம்பூச்சி பறக்கையில்-பெண்ணே! உன் புன்னகையின் அழகை கண்டேன்.. தமிழை படிக்கையில் தங்கத்தை கடிக்கையில் -பெண்ணே உன் உதட்டின் அழகை கண்டேன் மேகங்கள் கருக்கையில் மழைத்துளி தெறிக்கையில்-பெண்ணே உன் முகத்தினை முழு மதியாக கண்டேன்.. சேலை கட்டும் நேரத்தில் உன் கை பிடிக்கும் நேரத்தில்-பெண்ணை உன் வெட்கத்தின் அழகை கண்டேன்..
பத்து மாதம் சுமந்து பத்திரமாய் நம்மை வளர்த்து பாத்திரமாய் நம்மை உலகினில் பரப்பியவள்
muttham
முதல் மழை வானத்தை பார்த்து நான் ரசித்த போது எத்ரிபராமல் நீ கொடுத்த முத்தம் அந்த முத்தம் இன்றும் ஈராமாக என் கன்னத்தில் ........
காலமா, நானா வெற்றியாளன் ?
இரண்டு நிமிடத்தின் முயற்சியில் நூறு அடிகள் ஓடிவிட்டேன் நூற்றி இருபது நொடிகளை கடந்து கால தாமதமாய் இருந்து கொள்கிறது இருண்ட நேரம்
உன் தவறிய அழைப்புகள்...!!!
கைபேசியை வீட்டில் மறந்து வைத்துவிட்டு பாதி வழியில் உன் நினைவு வர அடித்து பிடித்து அவசர அவசரமாய் திரும்பி வீட்டிற்கு வருவதற்குள்,
உன் பெயரில் வந்திருந்த எண்ணற்ற அழைப்புகளை பார்த்துவிட்டு நீ பேச இருந்த அன்பான வார்த்தைகள் எதையுமே கேட்கமுடியாமல் அவைகள் அனைத்தும் குருஞ்செய்திகளாய் மாறி இருப்பதை படிக்கும் தருணங்களில், தாலாட்டை பாட முடியாத ஊமைத் தாயின் மடியில் தவழும் சிறு குழந்தையாய் உணர்கிறேன் ...!!!