2011-ல் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவு |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த விருதை அறிவித்துள்ளது. தொடர்ந்து 3-வது ஆண்டாக மெஸ்ஸி இந்த விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 24-வயதுக்குள் இந்த விருதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற வீரர் என்ற பெருமையும் அவருக்குச் செல்கிறது. இதற்கு முன்னர் பிரான்ஸின் ஜிடேன், பிரேசில் வீரர் ரொனால்டோ ஆகியோர் இந்த விருதை மூன்று முறை பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆர்ஜென்டீனா தேசிய அணியில் மட்டுமின்றி, பார்சிலோனா அணிக்காகவும் மெஸ்ஸி விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக், ஸ்பானிஷ் லீக், ஐரோப்பா சூப்பர் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை ஆகிவற்றில் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஓராண்டில் சர்வதேச போட்டிகளில் மெஸ்ஸி 53 கோல்கள் அடித்துள்ளார். இது தவிர மற்றவர்கள் கோல் அடிக்க பலமுறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கால்பந்து விளையாட்டின் மூலம் அதிக அளவு பணத்தையும், அதைவிட அதிகமான புகழையும் சம்பாதித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளவரும் இவர்தான். |
2011-ல் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவு
0
8:54 PM
Tags