இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள்: போனஸ் புள்ளியுடன் இந்தியா அமோக வெற்றி |
சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தில்ஷானும், ஜெயவர்தனேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 வது ஓவரின் முடிவில் இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஜெயவர்தனே 22 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் ஷேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மாத்யூஸ் 14 ஓட்டங்களும், சங்ககாரா சதத்தை கடந்து 105 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தில்ஷன் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 160 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 321 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரேந்திர சேவக் 30 ஓட்டங்களும், சச்சின் டெண்டுல்கர் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய காம்பிர் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வீராத் கோக்லி சிறப்பாக விளையாடி 86 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 133 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சிபீ கிண்ண தொடரில் 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளதன்படி புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்வதோடு, இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 15 புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. எனினும் ஓட்ட சராசரி விகிதத்தின்படி இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி 15 +0.162 புள்ளிகளையும் இந்திய அணி 15 -0.593 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதன்படி மார்ச் 2ம் திகதி இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு தெரிவாவது உறுதியாகும். |
இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள்: போனஸ் புள்ளியுடன் இந்தியா அமோக வெற்றி
0
8:57 PM
Tags