ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள சச்சின் |
சமீபகாலமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. கபில்தேவ், கங்குலி ஆகியோரும் இதனை வலியுறுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் சச்சினுக்கு உள்ள விளம்பர மவுசு இப்போதும் குறையவில்லை. அவருடனான விளம்பர ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்ற பேச்சும் எழவில்லை. இது தொடர்பாக சச்சினின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்து வரும் வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம் கூறியிருப்பதாவர்: சச்சினின் கிரிக்கட் வாழ்வில் சிலமுறை ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போதும் அவர் மூலம் விளம்பரம் செய்து கொள்ளும் நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. கிரிக்கட் வீரர் என்ற நிலையில் மட்டுமின்றி, தனது சரியான நடவடிக்கைகளாலும், குணத்தாலும் இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவை சச்சின் பெற்றுள்ளார். எனவே அவரது புகழுக்கு ஒருபோதும் குறைவு ஏற்படாது. பல நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் விளம்பர ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வருகின்றன. அவர் இன்னும் எவ்வளவு நாள்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்று தெரியாது. இருந்தபோதிலும் இனி வரும் பல ஆண்டுகளுக்கு அவரது விளம்பர ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்பட்டுதான் வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது |
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள சச்சின்
0
8:09 PM