ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி ரூ.900 கோடிக்கு காப்பீடு





ஐ.பி.எல் டி20 கிரிக்கட் போட்டி மற்ற போட்டிகளை காட்டிலும் அதிகமாக ரூ.900 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் டி20 கிரிக்கட் போட்டி 2008 ம் ஆண்டு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் வெற்றியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த வருடமும் ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 4 ம் திகதி முதல் மே 27 ம் திகதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 9 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த ஐ.பி.எல் போட்டியை ரூ.900 கோடிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) காப்பீடு செய்து உள்ளது. இதற்கான காப்புறுதி தொகையாக ரூ.10 கோடி செலுத்தப்படுகிறது.
ஐ.பி.எல் போட்டிகள் பேரழிவு, தீவிரவாத நாசவேலைகள், தட்பவெட்ப நிலை மற்றும் போட்டி திடீர் ரத்து போன்ற காரணங்களுக்காக காப்பீடு செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கான காப்பீட்டு தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
உலக கோப்பை கிரிக்கட் போட்டி ரூ.400 கோடிக்கு காப்புறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியை விட இது ரூ.150 கோடி கூடுதலாகும்.
கடந்த ஐ.பி.எல். போட்டிக்கு ரூ.750 கோடி காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.
மற்ற விளையாட்டு போட்டிகளான காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ரூ.200 கோடிக்கும், பார்முலா 1 கார்பந்தய போட்டி ரூ.500 கோடிக்கும் காப்பீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.