பிரபல ஜோதிடர் தாமோதரன் இந்தியாவின் கேரள மாநில அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் இவர் முழு நேர ஜோதிடராக மாறினார். இந்நிலையில் இவர் சச்சின் நிலை குறித்து ஆரூடம் கணித்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சச்சின் வரவிருக்கும் நாட்களில் பலம் வாய்ந்தவராக இருப்பார். அவர் அவசரப்பட்டு ராஜினாமா முடிவு எதனையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வரவிருக்கும் அவரது பிறந்ததினம் ஏப்ரல் 24 2012 மற்றும் 2013 மிக சிறப்பாக அமையும். இந்நாளில் அவர் மீண்டும் ஆற்றல் பெற்றவராக திகழ்வார். இவருக்கு வரும் பிறந்ததினத்துடன் 39 வயதை தொடுகிறார். இந்த வயதை கூட்டுகையில் 3 எண் வருகிறது. இந்த 39 என்பது(3 + 9 = 12 , 1+2 = 3). இந்த 3 ம் எண் இவருக்கு முழு ராசியான எண் ஆகும். இந்த காலம் வரும் போது அவர் 102 சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 102 ஐ பொறுத்தவரை கூட்டினால் 1+0+2 =3 வருகிறது. இவர் பிறந்ததினத்தை பொறுத்தவரையில் ஏப்ரல் 24 , 1973. இந்த எண்களை பொறுத்தவரை 2+4 = 6. இந்த 6ம் எண் அவருக்கு ராசியான எண் ஆகும். இவரது டெஸ்ட் அறிமுகம் கடந்த நவம்பர் 15 , 1989 ல் நிகழ்ந்தது, 15 என்பது 1 +5 = 6 . எனவே வரும் 2 பிறந்த நாள் கொண்டாடி முடிப்பதற்குள் சச்சின் 102 சதம் அடித்து சாதனை நிகழ்த்தி இருப்பார் என்று ஜோதிடர் உறுதியாக தெரிவித்துள்ளார். |
சச்சின் 100வது சத சாதனையை விரைவில் நிகழ்த்துவார்: பிரபல ஜோதிடர் கணிப்பு
0
8:06 PM
Tags