இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின்(வயது 39). டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 99 சதம் அடித்துள்ள இவர், 100வது சதம் அடிக்க கடந்த ஒரு ஆண்டாக முயற்சித்து வருகிறார். சச்சின் குறித்து வாசிம் அக்ரம் கூறியது: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு சச்சின் வழிவிட வேண்டும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஏனெனில் சச்சின் தொடர்ந்து சொதப்பினாலும் இந்திய அணித் தேர்வாளர்கள் இவரை எப்போதும் நீக்கப் போவதில்லை. சச்சின் தான் இவர்களுக்கு வழிவிட வேண்டும். அவுஸ்திரேலிய தொடரில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் கேலிக்குரிய முறையில் விளையாடினர். சச்சின், ஷேவாக் தொடக்கத்திலேயே வெளியேறினர். முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் களத்தில் நிற்க மறுக்கின்றனர். இப்படி விளையாடினால் எப்படி வெற்றி பெறுவது. எப்படியோ இலங்கைக்கு எதிரான போட்டியில் இமாலய இலக்கை துரத்தி வென்றது மகிழ்ச்சி தான். பந்துவீச்சை பொறுத்தவரையில் உமேஷ் யாதவ் மட்டும் தான் போதிய வேகத்துடனும், பவுன்சராகவும் இருக்கிறார். இர்பான் பதான், பிரவீண் குமார் செயல்பாடுகள் ஏமாற்றமே தந்தது. இத்தொடரில் வெற்றிக்கு தேவையான திட்டங்களை இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுத்தவில்லை. கடைசி நேரத்தில் இந்திய அணியினர் எழுச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். |
தாமாகவே முன்வந்து இளம் வீரர்களுக்கு சச்சின் வாய்ப்பளிக்க வேண்டும்: வாசிம் அக்ரம்
0
8:05 PM