இதுகுறித்து அவர் கூறுகையில், 320 ஓட்டங்கள் எடுத்த பின்பும் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். விராத் கோஹ்லி மிக அற்புதமாக விளையாடினார். எனது கிரிக்கட் வாழ்க்கையில் எதிரணியின் வீரர்கள் அற்புதமாக விளையாடியதைப் பார்த்துள்ளேன். அப்படிப்பட்ட சிறந்த ஆட்டங்களில் கோஹ்லியின் நேற்றைய ஆட்டமும் ஒன்று. நாங்கள் சிறப்பாகப் பந்துவீசவில்லை என்பது உண்மை. சரியாக களத்தடுப்பும் செய்யவில்லை. இருப்பினும் அதனால் இந்திய அணியின் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இன்னமும் வாய்ப்பு உள்ளது. லீக் ஆட்டங்களில் இரண்டு முறை அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளோம். எனவே கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். |
இந்தியாவுக்கு எதிரான தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று: ஜெயவர்த்தனா
0
8:04 PM
Tags