டி20 கால்பந்து அறிமுகம்




ஐபிஎல் டி20 கிரிக்கட் போட்டி போலவே கால்பந்து டி20 போட்டியை பெப்சி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல் டி20 கிரிக்கட் போட்டிகளின் வரவேற்பை தொடர்ந்து தற்போது பெப்சி கோ குளிர்பான நிறுவனம் கால்பந்து போட்டியிலும் டி20 போட்டியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இப்போட்டி 20 நிமிடம் நடைபெறும், ஒரு அணியில் 14 வயது முதல் 30 வயது வரை உள்ள 7 வீரர்கள் மட்டுமே விளையாடலாம்.
இந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை, லக்னோ, லூதியானா, டெல்லி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
சென்னை போட்டிக்கான பதிவு இன்று முதல் 20 ம் திகதி வரை நடைபெற உள்ளது. தகுதிச் சுற்று போட்டிகள் 24 மற்றும் 25 ம் திகதிகளில் நடைபெற உள்ளன.
இறுதிப் போட்டியில் வெல்லும் அணி வீரர்களுக்கு சர்வதேச கால்பந்து வீரர் பயிற்சி அளிப்பதுடன், இந்திய கிரிக்கட் அணி வீரர்களுடன் காட்சிப் போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.