புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு தினம் வருகிற 31 ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் WWF-INDIA என்ற அமைப்புடன் இணைந்து சச்சினும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது சிறிது நேரம் விளக்கை அணைப்பதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு தனிமனிதரும் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதன் மூலம் அனைத்து தரப்பினர்களும் கலந்து கொள்வதற்கு விழிப்புணர்வாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு இந்தியாவில் 60 லட்சம் மக்களும், உலக அளவில் நூறு கோடி மக்களும் இந்த பிரசாரத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்படத்தக்கது. |
புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு பிரசாரத்தில் சச்சின்
0
8:41 PM
Tags