மெஸ்சியின் பெயரில் விளையாட்டு நாளிதழ் வெளியீடு




அதிக கோல்கள் அடித்து சாதனை புரிந்த முன்னணி நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் செல்லப் பெயரால் அர்ஜென்டினாவில் விளையாட்டு நாளிதழ் ஒன்று பிரசுரமாகியுள்ளது.
அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பார்சிலோனாவுக்காக 234 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதனையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கு முன் 232 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்த, மறைந்த பார்சிலோனா ஜாம்பவான் செசாரே ரோட்ரிகஸின் மனைவி ஈம்மா ரெவிலி, லயோனல் மெஸ்சியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
மெஸ்சியின் சாதனை குறித்து அவர் கூறுகையில், லயோனல் மெஸ்சியின் ஆட்டம் எனது கணவரை நினைவுப்படுத்துகிறது. இளம் வயதில் அவர் எப்படி ஒழுக்கத்துடன் கால்பந்தாட்டத்தை விளையாடினாரோ அதே போலவே மெஸ்சியும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார் என்றும், எனது கணவரின் சாதனை திறமை மிக்க ஒரு கால்பந்து வீரரால் முறியடிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனா பயிற்சியாளர் பெப் கார்டியாலோ கூறுகையில், கூடைப்பந்தாட்டத்தில் மைக்கேல் ஜோர்டான் போல கால்பந்துக்கு லயோனல் மெஸ்சி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பார்சிலோனா முன்னாள் அணித்தலைவர் ஜோகன் கிரைப் லயோனல் மெஸ்சி குழந்தைகளின் முன் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லயோனல் மெஸ்சியின் இந்த அரிய சாதனையை பாராட்டி அர்ஜென்டினாவின் முன்னணி விளையாட்டு நாளிதழான "OLE" இன்று லயோனல் மெஸ்சியின் பெயரிலேயே நாளிதழை வெளியிட்டுள்ளது.
அதாவது, லயோனல் மெஸ்சியின் செல்லப் பெயரான 'CULE' என்ற பெயரில், தனது நேற்றைய பதிப்பை வெளியிட்டு அவரை கவுரவித்தது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.