ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் கிளப் அணிகள் பங்கேற்கும் ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, கிராணடா அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியின் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி ஹாட்ரிக் கோல்(17, 68, 88வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய 28 போட்டியில் 20 வெற்றி, 6 டிரா, இரண்டு தோல்வி உட்பட 66 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் ரியல் மாட்ரிட் அணி(71 புள்ளி) உள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக இதுவரை 314 போட்டியில் பங்கேற்று 234 கோல் அடித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனா கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில், முன்னாள் ஸ்பெயின் வீரர் சீசர் ரோட்ரிகுயசை(232 கோல், 351 போட்டி, 1942-55) பின்தள்ளி முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்தார். |
புதிய சாதனை படைத்த மெஸ்சி
0
10:38 AM
Tags