உலகக் கிண்ண போட்டியோடு முடிந்த இந்தியாவின் வெற்றி





உலகக் கிண்ண போட்டி முடிந்து நாளையோடு ஓராண்டாகிறது. அதன் பிறகு இந்திய அணி தொடர் தோல்விகளையே சந்தித்து வருகின்றது.
இந்திய அணி உலக கிண்ணத்தை முதன் முறையாக 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் கைப்பற்றியது.
அதன் பின்பு 28 ஆண்டுகளுக்கு கழித்து கடந்த ஏப்ரல் 2ம் திகதியன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான இறுதிச் சுற்றில் டோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
இந்த போட்டிக்கு பின்னர் ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க சென்றனர்.
அடுத்து சென்ற மேற்கந்திய தீவுகள் சுற்று பயணத்திலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர்  நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.
இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் முறையில் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்தது. மேலும் இந்திய அணி டெஸ்ட் தொடரின் தனது நம்பர் 1 இடத்தையும் இழந்தது.
ஒருநாள் போட்டியிலும் தொடர் தோல்விகளே உதாரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரிலும், அடுத்து நடைபெற்ற ஆசிய கிண்ண போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரும் தனது 100வது சதத்தை நிறைவு செய்வதற்குள் பல்வேறு தரப்பு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதிரடி வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது தான் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
பெருஞ்சுவர் என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் தனது ஓய்வை அறிவித்தார். சச்சினும் தனது சிகிச்சை குறித்து லண்டனில் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு ஐ.பி.எல் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
இனி வரும் கிரிக்கெட் போட்டிகளிலாவது இந்திய அணி வெற்றியை பெற்றுத் தரும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.