சத நாயகன் சச்சின் தங்க மழையில் நனைய உள்ளார்




இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் 100 சதம் நிறைவு செய்ததை பெருமைபடுத்தும் விதத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 100 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
சச்சின் பலநாட்களாக போராடி கடந்த மாதம் ஆசியக் கிண்ண போட்டியில் வங்கதேசத்துக்கெதிராக தனது 100 வது சதத்தை நிறைவு செய்து உலக சாதனை படைத்தார். இதற்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சச்சினை கௌரவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் சச்சினின் 100 சதத்தை நினைவு கூறும் வகையில் 25 லட்சம் மதிப்பிலான் 100 தங்க நாணயங்கள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் இணை செயலாளர் நிதின் தலால் கூறுகையில், கடந்த சங்க கூட்டத்தின் போதே இதனை முடிவு செய்து விட்டோம், சச்சினிடம் அனுமதியும் பெற்று விட்டோம். ஆனால் திகதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.