ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 76 போட்டிகள் என அடுத்த 54 நாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது ஐ.பி.எல் அணிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணி முதல் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். தொடக்க விழா குறித்து ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், விழாவில் கேட் பெர்ரியின் நடன நிகழ்ச்சிக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 9 அணித்தலைவர்களுக்கு உறுதி மொழி எடுத்துக்கொள்ள உதவுகிறார். தவிர பிரசூன் ஜோஷி எழுதிய கவிதையை பாடுகிறார் என்றார். |
ஐந்தாவது ஐ.பி.எல் தொடக்க விழா: சென்னையில் கோலாகலம்
0
10:15 AM
Tags