அறிமுகமாகி​ன்றது LG Optimus L9 கைப்பேசிகள்


LG நிறுவனமானது இரட்டை சிம் வசதி கொண்டதும் நவீன தொழில்நுட்பத்தில் அமைந்ததுமான Optimus L9 எனப்படும் கைப்பேசிகளை விரைவில் அறிமுகப்படுத்துகின்றது.
கொரிய நாட்டிலில் தயாரிக்கப்பட்டு வரும் இக்கைப்பேசிகள் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு உருவாக்கப்படுகின்றது.
மேலும் 1GHz வேகத்தில் செயற்படவுள்ள புரோசசர், 4.7 அங்குலமுடைய தொடுதிரை, 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாவும் காணப்படுகின்றது.
125 கிராம்களே உடைய இக்கைப்பேசியின் உள்ளக நினைவகமானது 4GB வரை காணப்படுவதுடன் 44 வகையான மொழிகளுக்கு துலக்கத்தை ஏற்படுத்தக்கூடிய Optical Character Recognition மென்பொருளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.