மக்களின் நம்பிக்கையை வென்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஜப்பானின் சோனி நிறுவனமானது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Xperia டேப்லெட்டுக்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கான அலுவலக ரீதியான அறிவித்தலை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம் குறித்த டேப்லெட் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லெட் ஆனது Nvidia Tegra 3 quad-core புரோசசரை உள்ளடக்கியுள்ளது.
மேலும் 9.4 அங்குலமுடையதும், 1280 x 800 பிக்சல்களைக் கொண்ட தொடுதிரை முகப்பைக் கொண்டுள்ளதுடன் இதில் காணப்படும் மின்கலமானது தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்கள்வரை செயற்படக்கூடியது.
தவிர இவை 16GB, 32GB, 64GB சேமிப்புக் கொள்ளளவுகளின் அடிப்படையில் முறையே $399, $499 , $599 பெறுமதிகள் உடையவை என அறிவிக்கப்பட்டுள்ளது.