எந்த மென்பொருளுமின்றி YouTube வீடியோக்களினை தரவிறக்கம் செய்ய.

எண்ணற்ற வீடியோக்கள் குவிந்துகிடக்கும் தளம் YouTube ஆகும். நாம் இங்கு விரும்பும் வீடியோக்கள் பலவற்றையும் பார்க்கிறோம், அதிகம் பிடித்துப்போனால் தரவிறக்கம் செய்து கணனியில் சேமித்து வைத்திருப்போம்.
நாம் இவ்வாறு எமக்கு தேவையான வீடியோக்களை YouTube தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள ‘youtube downloder’ அல்லது இதுபோன்ற மென்பொருட்களின் தேவை அவசியம்.
ஆனால் எந்த மென்பொருட்களும் இன்றி ‘youtube’ வீடியோக்களை தரவிறக்கும் வழிமுறை பற்றி இன்று நாம் பார்க்கலாம்.
step 1. நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
(வீடியோவின் URL ஐ Adress Bar இல் காணலாம்).
அதாவது Adress Bar இல் உள்ள URL லில் உள்ள  www. என்பதை மட்டும் அழித்துவிட்டு,
Tamil Comedy Collections - YouTube 1111111111
அதற்கு பதிலாக ss என type செய்த பின் ENTER ஐ அழுத்துங்கள்.
Tamil Comedy Collections - YouTube 22222222222
அவ்வளவு தான் இப்போது உங்கள் பக்கம் http://en.savefrom.net என்ற தளத்திற்கு தானாகவே திருப்பப்படும்.
step 2. அங்கு, எந்த ‘format’ இல் [eg.g. 3GP, MP4, FLV etc]  வீடியோவை தரவிறக்க வேண்டுமென்பதை தெரிவு செய்துவிட்டு Download இனை ’CLICK’ செய்தால் போதுமானது. இப்போது வீடியோ தரவிறக்கமாகத் தொடங்கியிருக்கும்.
அல்லதுவிட்டால் நேரடியாகவே இத்தளத்திற்கு சென்று நீங்கள் தரவிறக்க வேண்டிய”YouTube” வீடியோவின்  URL ஐக் கொடுத்தும் தரவிறக்க முடியும்.
குறிப்பு:- இந்த வசதியை உங்கள் ”mobile device” களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.