கூகுள் நிறுவனம் Google Office இன் Docs, Sheets மற்றும் Slides
அப்பிளிக்கேஷன்களை அப்டேட் செய்துள்ளதனால் கூகுள் பிளே தளத்திலிருந்து
Quickoffice அப்பிளிக்கேனை நீக்கவுள்ளது.
இதனால் Quickoffice அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்யவோ, அல்லது கொள்வனவு செய்யவோ முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் கடந்தவாரம் இடம்பெற்ற Google I/O Developer மாநாட்டில் விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை Quickoffice அப்பிளிக்கேஷனும் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.