140-ஐ 10 ஆயிரமாக மாற்றும் ட்விட்டர்?

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் குறித்து நெட்டிசன்கள் பெரும்பாலும் புகார் கூறுவது அதன் எழுத்துக் கட்டுப்பாடு குறித்துதான். உங்களுடைய உணர்வுகள் எதுவாயினும் ட்விட்டரில் அதை 140 எழுத்துக்களுக்குள்தான் சொல்ல முடியும்.
இந்த நிலையில், ட்விட்டர் தனது எழுத்துக் கட்டுப்பாட்டை தளர்த்தும் விதமாக இனி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் எழுத்துக்கள் உபயோகிக்க வழிவகை செய்து வருவதாக பிரபல தொழில்நுட்ப வலைதளமான ரீ கோட் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடப்பு காலாண்டின் இறுதியில் ட்விட்டர் வெளியிடும் என்றும் ரீ கோட் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.